செயற்கை புன்னகை

அழுத்தமான கவிதை! இதில் வாழ்க்கையின் கஷ்டங்கள் மற்றும் அவற்றைப் பொதுமக்கள் எவ்வாறு மறைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. கவிதையின் ஒவ்வொரு பாச்சமும் சில நேரங்களில் நாம் அனைவரும் சிந்திக்கக்கூடிய வேதனைகளை விவரிக்கிறது. இதனைப் படிக்கையில் மனதில் ஒரு திருட்டான உணர்வு ஏற்படுகிறது, ஏனெனில் நம்மில் பலர் இந்த நிலையில் ஒருமுறை இருந்திருக்கலாம்.

செயற்கை புன்னகை

குழந்தையின் பசிக்கு ஆறு மணி நேரம் கழித்து சாப்பாடு வாங்க முடியாமல் தவிக்கும் அன்னையின் கண்களை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள்.

காலையில் நிதி இல்லாமல் வேலைக்கு போய், இரவில் நிதி இல்லாமல் வீடு திரும்பும் தந்தையின் மனநிலை பற்றி யோசித்து பாருங்கள். 

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள்.

மரணம் வேண்டுமென நினைத்து, பிறந்த நாளில் நிமிடமொன்றும் சிரிக்காது தனிமையில் தவிக்கும் நண்பனின் முகத்தை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள்.

நீண்ட நாட்களாக உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு, ஒரு அழுகிய அறையில் தனிமையில் துன்பப்படும் முதியவரின் பார்வையை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள்.

ஓடாத கை கடிகாரத்தை யாரும் பார்க்கும் முன்னே சரியான நேரத்தை 

யூகித்து வைக்கும் நபரை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். 

பாலை பொங்கிவிட்டுட்டு அப்படியென்ன யோசனைனு வருகின்ற கேள்விக்கு பதில் தராம சட்டுனு கண்ணுகிட்ட கொண்டு போற‌ கைகளை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். 

பள்ளி கட்டணம் கட்டவில்லையென அழும் மகனை சமாதானப்படுத்தி விட்டு தனியாக அமர்ந்து தன்னிலை நினைத்து வருந்தும் மத்திம ஆடவரை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள்.

துரோகத்தை தாங்கமுடியாமல்

துரோகம் செய்தவரை நினைத்து

நானென்ன செய்தேன் என்று அழுது  கெஞ்சிக்கொண்டிருக்கிற கண்களை

கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். 

பனிரெண்டு மணிநேர வேலைக்கு பிறகு வியர்வை படிந்த சட்டையுடன் டிராஃபிக் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் பரிதாபத்துக்குரிய மாத சம்பளகாரனின் கண்களை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். 

காதால் கேட்க முடியாத வார்த்தைகளை வாங்கி கட்டிக்கொண்டு திருப்பி தர இயலாமல் தலையணையோடு தர்க்கம் காட்டும் பெண்டிரை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். 

இருபதாம் தேதியே சம்பளம் தீர்ந்த நிலையில் இன்னும் பத்து நாட்கள் எப்படி ஓட்டமுடியும் என்று நினைத்து தூங்காமல் தவிக்கும் சராசரி மனிதனின் கண்களை கண்டதுண்டா?

கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். 

ஏனெனில் தன் கலங்கிய பார்வையை யாராவது பார்த்து விட போகிறார்கள் என்று அவசர அவசரமாக 'செயற்கை புன்னகைக்கு' மாறுவார்கள்.

அது இன்னும் பெருவலி..

Comments

Popular posts from this blog

மழலை.

அவனைக் கண்டதும்......