Posts

Showing posts from July, 2024

தாய்.

Image
  தாயே நீ வெட்கம் இழந்ததால் தான் நான் உருவம்  பெற்றேன். பிறந்ததும் பெண் சிசுவென  பெறுமைக் கொண்டாயே நீ உயிர்த் துடித்ததால் தானே  நான் உயிர் வாழ்கின்றேன். உணர்ந்துக் கொண்டேன் உன் உயிர் துடிப்பை நானும் என் மகனை ஈன்றபோது.

செயற்கை புன்னகை

Image
அழுத்தமான கவிதை! இதில் வாழ்க்கையின் கஷ்டங்கள் மற்றும் அவற்றைப் பொதுமக்கள் எவ்வாறு மறைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. கவிதையின் ஒவ்வொரு பாச்சமும் சில நேரங்களில் நாம் அனைவரும் சிந்திக்கக்கூடிய வேதனைகளை விவரிக்கிறது. இதனைப் படிக்கையில் மனதில் ஒரு திருட்டான உணர்வு ஏற்படுகிறது, ஏனெனில் நம்மில் பலர் இந்த நிலையில் ஒருமுறை இருந்திருக்கலாம். செயற்கை புன்னகை குழந்தையின் பசிக்கு ஆறு மணி நேரம் கழித்து சாப்பாடு வாங்க முடியாமல் தவிக்கும் அன்னையின் கண்களை கண்டதுண்டா? கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். காலையில் நிதி இல்லாமல் வேலைக்கு போய், இரவில் நிதி இல்லாமல் வீடு திரும்பும் தந்தையின் மனநிலை பற்றி யோசித்து பாருங்கள்.  கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். மரணம் வேண்டுமென நினைத்து, பிறந்த நாளில் நிமிடமொன்றும் சிரிக்காது தனிமையில் தவிக்கும் நண்பனின் முகத்தை கண்டதுண்டா? கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு, ஒரு அழுகிய அறையில் தனிமையில் துன்பப்படும் முதியவரின் பார்வையை கண்டதுண்டா? கண்டால் பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். ஓடாத கை கடிகாரத்தை ய